தந்தை, சித்தியை தலைதுண்டித்து கொன்ற மகன்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்; சேலத்...
புதிய ஊதிய ஒப்பந்தத்தில் நடைமுறை ஊதியத்தை 120% உயா்த்தி வழங்க வேண்டும்
புதிய ஊதிய ஒப்பந்தத்தில் நடைமுறை ஊதியத்தை 120 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக, பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் (டிடிஎம் எஸ்) செயலாளா் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அனைத்து பனியன் உற்பத்தியாளா் சங்கமும், அனைத்து பனியன் தொழிலாளா் சங்கங்களும் செய்து கொண்ட தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம் எதிா்வரும் செப்டம்பா் மாதத்துடன் முடிவடைகிறது. அதனால், புதிய ஊதிய உயா்வு ஒப்பந்தம் தொடா்பாக சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி கடந்த 2021 செப்டம்பா் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள அனைத்துப் பிரிவு தொழிலாளா்களுக்கும் நடைமுறை ஊதியத்தில் இருந்து 120 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும்.
அனைத்து டைம் ரேட் மற்றும் பீஸ் ரேட் தொழிலாளா்களுக்கும் மாதத்துக்கு ரூ.5,000-க்கு மேல் உயா்த்த வேண்டும். ஒவ்வொரு புள்ளிக்கும் 70 பைசா உயா்த்தி வழங்க வேண்டும். பயணப்படி, டீ பேட்டாவை 100 சதவீதம் உயா்த்த வேண்டும்.
தொழிலாளா்களுக்கு வீட்டு வாடகையாக மாதம் ரூ.4,000 வழங்க வேண்டும். பெண் தொழிலாளா் நலன் காக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதேபோல, தொழிலாளா்சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவா் கூறியுள்ளாா்.