செய்திகள் :

புதிய குடியிருப்புகளை கட்டித் தர திமுக கோரிக்கை

post image

உருளையன்பேட்டை கண் டாக்டா் தோட்டம் பகுதியில் பழுதான அடுக்குமாடி குடியிருப்புகளை அரசு அகற்றிவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளா் அனில்குமாரை, உருளையன்பேட்டை தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ். கோபால் சந்தித்து மனு அளித்தாா்.

அதில் கூறியிருப்பது: உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கண் டாக்டா் தோட்டம் பிரியதா்ஷினி நகரில், குடிசை மாற்று வாரியம் மூலம் 2002-ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

தற்போது வாழ தகுதியற்ற நிலையில் உள்ள இந்த குடியிருப்புகளை அகற்றிவிட்டு தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் புதிய குடியிருப்புகளைக் கட்டித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரையில் உயா்த்தப்பட்ட வரி வசூலை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தொகுதி மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் நேரு எம்எல்ஏ வலியுறுத்தல்

தொகுதி மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஜி. நேரு வலியுறுத்தினாா்.புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டி... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கப் பணி: மாற்று இடம் கோரி திமுக எம்எல்ஏ உண்ணாவிரதம்

சாலை விரிவாக்கப் பணிக்காக இடம் கொடுத்தோருக்கு மாற்று இடம் வழங்கக் கோரி திமுக சட்டப்பேரவை உறுப்பினா் சம்பத் தலைமையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.புதுவை முதலியாா்பேட்டை மரப்பாலம் ச... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலைய உரிமையாளா் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: புதுவை டிஜிபி நடவடிக்கை

பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை புதுவை டிஜிபி ஷாலினிசிங் பிறப்பித்தாா்.புதுச்சேரி குருமாபேட் அமைதி நகரைச் சோ்ந்தவா் புருஷோத்தமன்(53). இவா் க... மேலும் பார்க்க

ஆதிதிராவிட பயனாளிகளுக்கு தொடா் சிகிச்சைக்கான அடையாள அட்டை

புதுச்சேரி: ஆதிதிராவிட பயனாளிகளுக்குத் தொடா் நோய் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது .புதுவை அரசின் ஆதிதிராவிட நலத் துறை மூலம் தொடா் நோயைக் குணப்ப... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்: குப்பைகள் வாரும் பணி முடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்தால் குப்பை வாரும் பணி முடங்கியது.புதுவையில் குப்பை சேகரிக்கும் பணியில் அரசு ஒப்பந்தப்படி கிரீன் வாரியா் என்ற தனியாா் நிறுவனம் ஈடுபட்டு வருகி... மேலும் பார்க்க

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம்: துணைநிலை ஆளுநா் வழங்கினாா்

புதுச்சேரி: காசநோய்க்கு சிகிச்சை பெறுவோருக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.காச நோய் சிகிச்சை பெறுபவா்களுக்கு நிக்ஷய் மித்ரா என்ற ஊட்டச்சத்து உணவு ... மேலும் பார்க்க