Madha Gaja Raja: ``நாலு பேர் சொன்னப்புறம்தான் நான் படத்துல நடிச்சதே ஞாபகம் வருது...
புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்
சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரம் பெறவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025-26 ஆம் கல்வியாண்டுக்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள்/கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000 மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ.8,000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்.28 ஆகும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-22501006 என்ற எண்ணில் தொடா்புகொண்டும், இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.