'பனாமா கால்வாய்க்கு குறிவைக்கும் ட்ரம்ப்' - சர்வதேச அரசியலில் என்ன நடக்கிறது?
"புதிய நடிகர்களே கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள்" - ஜூன் 1 முதல் மலையாள சினிமா படப்பிடிப்புகள் ரத்து
மலையாள சினிமாவில் நடிகர்களுடைய சம்பளம் அதிகமாக உள்ளதால், அதைக் குறைக்க வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்புக்கு நான்கு மாதங்களுக்கு முன் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் நடிகர்களின் சம்பளமும், ஜி.எஸ்.டி-யும் அதிகமாக உள்ளதாகக் கூறி, ஜூன் 1-ம் தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்தப்போவதாகத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். கேரள மாநிலம் கொச்சியில் சினிமா சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் ஜூன் 1-ம் தேதி முதல் படப்பிடிப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சினிமா தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மலையாளத்தில் கடந்த ஆண்டு 176 சினிமாக்கள் பாக்ஸ் ஆப்பீஸில் தோல்வியடைந்தன. ஜனவரி மாதம் மலையாள சினிமாவில் 101 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரிலீஸான 28 சினிமாக்களில் 'ரேகாசித்திரம்' என்ற சினிமா மட்டுமே வருவாய் ஈட்டியுள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-12-29/izqwjic1/IMG8195.jpeg)
சினிமா தயாரிப்புச் செலவில் 60 சதவிகிதம் நடிகர், நடிகைகளின் சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது. மலையாள சினிமாவில் நடிகர், நடிகைகளின் சம்பளம் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. அவர்களிடம் ஒரு நேர்மையும் இல்லை. புதிய நடிகர்களும் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கின்றனர். தொழில்நுட்பப் பணியாளர்களில் 60 சதவிகிதத்தினர் பட்டினியில் வாடுகின்றனர். 50 நாட்களில் முடிக்க வேண்டிய படப்பிடிப்பை 150 நாட்கள் நீட்டிக்கின்றனர்.
நடிகர்கள் வாங்கும் சம்பளத்தின் 10 சதவிகிதம்கூட தியேட்டர்களில் வசூல் ஆவது இல்லை. மலையாளத்தில் இதுவரை 100 கோடி வசூலித்த ஒரு சினிமாகூட இல்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-09-16/x9zjlk6k/Newssense-article-73.png)
அரசு ஒரு உதவியும் செய்யவில்லை. ஓடிடி வியாபாரமும் நடைபெறவில்லை. எனவே ஜூன் 1-ம் தேதி முதல் சினிமா வேலை நிறுத்த போராட்டம் உறுதியாக நடைபெறும். படப்பிடிப்பும், ஒளிபரப்பும் நிறுத்தப்படும். ஒருவிதத்திலும் சினிமா எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 30 சதவீதம் ஜி.எஸ்.டி செலுத்தி எந்த தொழிலை நடத்த முடியும்?
ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி ஆகியவற்றைத் திரும்பப்பெற வேண்டும். சினிமா நடிகர், நடிகைகள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்" என்றார்.
கொரோனாவுக்குப்பின் சினிமா சற்று மீண்டு வரும் நிலையில் தயாரிப்பாளர்களின் போராட்ட அறிவிப்பு மலையாள சினிமாவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...