செய்திகள் :

புதிய போப் தேர்வானார்! முதல் முறையாக அமெரிக்கருக்கு வாய்ப்பு!

post image

கத்தோலிக்கத் திருச்சபையில் மதகுருவாக புதிய போப் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய போப் ஆண்டவரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற கார்டினல்களின் முதல் நாள் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாததால், அந்தக் கூட்டம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை தொடங்கியது. இந்த நிலையில் இன்று இரவு புதிய போப் தேர்வு செய்யப்பட்டு புகைப் போக்கி வழியாக வெண்புகை வெளியிடப்பட்டது.

உடல்நலக் குறைவு காரணமாக கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவா் போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21 ஆம் தேதி காலமானார். கத்தோலிக்க திருச்சபை மரபுப்படி, அடுத்த போப்பை தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் மே 5 ஆம் தேதியிலிருந்து மே 10-ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வாடிகனிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் மூடிய அரங்கத்துக்குள் இதற்கான வாக்கெடுப்பு புதன்கிழமை நடைபெற்றது. இந்த ரகசிய வாக்கெடுப்பில் 71 நாடுகளைச் சோ்ந்த 133 கார்டினல்கள் பங்கேற்றனர்.

எனினும், இந்தக் கூட்டத்தில் புதிய போப் ஆண்டவர் தோ்ந்தெடுக்கப்பட்டார். வெளியே காத்திருந்த மக்களுக்கு இதை உணர்த்துவதற்காக பாரம்பரிய முறைப்படி தேவாலயத்தின் புகைப்போக்கியின் வழியாக வெண்புகை வெளியிடப்பட்டது.

அதன்படி, புதிய போப் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டதாக வாடிகன் அறிவித்தது. ரோம் நகரின் சிஸ்டைன் தேவாலயத்தில் 133 கார்டினால்களும் சேர்ந்து புதிய போப்பைத் தேர்ந்தெடுத்தனர். இதன் அடையாளமாக அங்குள்ள புகைக் கூண்டில் வெள்ளைப் புகை வெளியிடப்பட்டது. அதைக் கண்ட அங்கு குழுமியிருந்த ஏராளமான மக்கள் ஆரவாரம் செய்தனர். 

அதன்படி புதிய போப்பாக 69 வயதான ராபர்ட் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மக்கள் முன் தோன்றினார்.

அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் பிறந்தவரான ராபர்ட் ப்ரெவோஸ்ட், பெரு நாட்டில் கத்தோலிக்க திருச்சபை பணிகளை மேற்கொண்டவர். இதில், சிறப்பம்சமாக போப் பதவிக்கு அமெரிக்கர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். புதிய போப் இனி பதினான்காம் லியோ என்ற பெயரால் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: களமிறங்கியது கடற்படை: பாகிஸ்தானின் கராச்சியில் தாக்குதல்!

இந்திய ‘ட்ரோன்’ தாக்குதல் லாகூரில் 4 வீரா்கள் காயம்: பாகிஸ்தான் தகவல்

லாகூரில் இந்தியா நடத்திய ‘ட்ரோன்’ (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) தாக்குதலில் 4 ராணுவ வீரா்கள் காயமடைந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்தியா ஏவிய அனைத்து டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும் அறிவிக... மேலும் பார்க்க

சொந்த போா் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா

இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ன் நினைவு தினத்தை முன்னிட்டு ரஷியா தாமாக முன்வந்து அறிவித்த போா் நிறுத்தத்தையே அது 734 முறை மீறியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் உக்ரைன்... மேலும் பார்க்க

கனிம ஒப்பந்தம்: உறுதி செய்தது நாடாளுமன்றம்

உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்காக அந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு உக்ரைன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.உக்ரைன் மீது ரஷியா க... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் அதைத் தொடா்ந்து இருநாட்டு எல்லையில் நிலவும் மோதல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவ... மேலும் பார்க்க

இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலால் ஏற்பட்டுள்ள சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நியூயாா்க்கில் செய்தியாளா்களைச் சந்தித்த அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் பிராந்தியத்துக்கான க... மேலும் பார்க்க