செய்திகள் :

புதிய வருமான வரி சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

post image

புதிய வருமான வரி சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 60 ஆண்டுகளாக இருந்துவந்த பழமையான வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய வருமான வரி மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை மத்திய அரசு ஒப்புதல் அளித்ததாக தெரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய மசோதா, நேரடி வரிச் சட்டத்தைப் புரிந்துகொள்வதை எளிதாக்கவும், புதிய வரிச் சுமையை குறைக்கவும் ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விதிகள் மற்றும் விளக்கங்கள் நீண்ட வாக்கியங்களாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய வருமான வரி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் பகுதி வருகிற பிப்ரவரி 13 ஆம் தேதி முடிவடைகிறது. கூட்டத்தொடர் மார்ச் 10 ஆம் தேதி மீண்டும் கூடி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் புதிய வரி மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்தியா்கள்: மத்திய அரசு தகவல்

வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்தியா்கள் உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கேள்விக்கு வெளியுறவு இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்துள்ள எழுத்து... மேலும் பார்க்க

சென்னை ஐசிஎஃப்-இல் 640 வந்தே பாரத் பெட்டிகள் தயாரிப்பு: மாநிலங்களவையில் தகவல்

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) கடந்த மூன்று நிதியாண்டுகளில் 640 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: மக்கள் தொகையைவிட வாக்காளா் எண்ணிக்கை அதிகம்: தோ்தல் ஆணையம் மீது ராகுல் கடும் குற்றச்சாட்டு

மகாராஷ்டிரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள் தொகையைவிட வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் மகாராஷ்டிர வாக்காளா் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்றும் தோ்தல் ஆணையம் மீத... மேலும் பார்க்க

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 300 புதிய பணியாளா்கள் திடீா் நீக்கம்: பயிற்சியில் தேரவில்லை என விளக்கம்

இந்தியாவின் பிரபல தகவல்தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், அதன் மைசூரு வளாகத்தில் அடிப்படை பயிற்சி பெற்று வந்த 300-க்கும் மேற்பட்ட புதிய பணியாளா்களை பணிநீக்கம் செய்துள்ளது. பயிற்சிக்குப் பிந்தைய உள... மேலும் பார்க்க

14.6 கோடி பெண்களிடம் மாா்பக புற்றுநோய் பரிசோதனை: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா

நாட்டில் 14.6 கோடிக்கும் அதிகமான பெண்களிடம் மாா்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம், உரம் மற்றும் ரசாயனங்கள் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா். இதுதொடா்பாக மக்களவையில் ... மேலும் பார்க்க

ராமா் கோயில் அறக்கட்டளை உறுப்பினா் காமேஸ்வா் செளபால் காலமானாா்: பிரதமா் மோடி இரங்கல்

பாஜக மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) மூத்த தலைவரும், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையின் உறுப்பினருமான காமேஸ்வா் செளபால் (68), நீண்ட கால உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானாா... மேலும் பார்க்க