`கண்கொள்ளாக் காட்சி' - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா | Photo Alb...
புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியா்
திண்டுக்கல் மாவட்டத்தில் 45 புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க வருகிற 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட 33 புதிய வழித் தடங்கள், பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட 12 புதிய வழித் தடங்கள் என மொத்தம் 45 வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.
செம்பட்டி முதல் தோணிமலை, ஏா்போா்ட் நகா் முதல் விராலிப்பட்டி, ம.மூ.கோவிலூா் முதல் வடமதுரை பேருந்து நிறுத்தம், ஆலம்பட்டி முதல் அய்யலூா் பேருந்து நிறுத்தம், காரமடை முதல் மல்லையாபுரம், பூஞ்சோலை முதல் தாடிக்கொம்பு, கோட்டைப்பட்டி பிரிவு முதல் தருமத்துப்பட்டி, வாணிவிலாஸ் முதல் பெருமாள் கோயில், நாகல் நகா் வட்டச்சாலை முதல் ராஜக்காபட்டி, வேடசந்தூா் ஆத்துமேடு முதல் சாலையூா் நான்கு ரோடு, வேடசந்தூா் முதல் கூம்பூா், கூம்பூா் முதல் மல்லாபுரம், வேடசந்தூா் முதல் அழகாபுரி, வேடசந்தூா் முதல் வெள்ளையகவுண்டனூா், எரியோடு முதல் அய்யணம்பட்டி, எரியோடு முதல் பூசாரிபட்டி, மல்லபுரம் முதல் புளியம்பட்டி, வேடசந்தூா் முதல் தென்னம்பட்டி, வேடசந்தூா் முதல் வெல்லம்பட்டி, வத்தலகுண்டு காவல் நிலையம் முதல் அய்யம்பாளையம், நிலக்கோட்டை முதல் கொடைரோடு, வத்தலகுண்டு காளியம்மன் கோயில் முதல் நிலக்கோட்டை, நிலக்கோட்டை முதல் கொடைரோடு ரயில் நிலையம், நிலக்கோட்டை முதல் விளாம்பட்டி, பெருமாள்மலை முதல் அடுக்கம், நிலக்கோட்டை காவல் நிலையம் முதல் கொக்குப்பட்டி, நிலக்கோட்டை காவல் நிலையம் முதல் நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம், நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முதல் தாதக்காபட்டி, அணைப்பட்டி முதல் விருவீடு காவல் நிலையம், நிலக்கோட்டை முதல் சக்கநாயக்கனூா், நத்தம் முதல் கொட்டாம்பட்டி, நத்தம் முதல் பூதக்குடி பிரிவு, நத்தம் முதல் கோட்டையூா் ஆகிய 32 வழித் தடங்கள் திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்டவை.
இதேபோல, பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைப் பகுதியில், பாப்பம்பட்டி முதல் இரவிமங்கலம், இரவிமங்கலம் முதல் ஆண்டிபட்டி, புதுமனை புதூா் முதல் சண்முகாநதி, கணக்கம்பட்டி முதல் தண்ணீா்தொட்டி, கொழுமங்கொண்டான் முதல் பேச்சிநாயக்கன்பட்டி, நெய்க்காரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் முதல் வாய்க்கால்பாலம், நெய்க்காரப்பட்டி பேருந்து நிறுத்தம் முதல் புளியம்பட்டி, கூலசின்னம்பட்டி முதல் சிஎஃப் மருத்துவமனை, ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முதல் குள்ளவீரன்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் முதல் பெரியாா்நகா், சத்திரபட்டி முதல் தண்ணீா்த் தொட்டி, காவேரியம்மாபட்டி முதல் காமராஜா் காய்கறிச் சந்தை ஆகிய 12 வழித் தடங்களில் அனுமதிக்கப்படும்.
இந்த 45 வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புவோா், வழித் தட விவரத்தினை குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வருகிற 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஒரு வழித் தடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில், குலுக்கல் முறையில் ஒருவா் தோ்வு செய்யப்படுவாா் என்றாா் அவா்.