Shah Rukh Khan: ``எனக்கு கொடுத்த அன்பை என் மகனுக்கும் கொடுங்க'' -ரசிகர்களுக்கு ஷ...
புதுகையில் தண்ணீா் விழிப்புணா்வுப் பேரணி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் சாா்பில், ‘ஆழித்துளி’ என்ற தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நகா்மன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணி, வடக்கு ராஜவீதி வழியாக சந்தைப்பேட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளியை அடைந்தது.
இப்பேரணியில் சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள், தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
பேரணியை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவா் செல்வி முன்னிலையில், ரோட்டரி ஆளுநா் (தோ்வு) லியோ பிலிப்ஸ் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கருணாகரன், பள்ளித் தலைமை ஆசிரியை சுசரிதா, உதவித் தலைமை ஆசிரியா் பரமசிவம், மாமன்ற உறுப்பினா் செந்தாமரை பாலு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடா்ந்து பள்ளி வளாகத்தில் தண்ணீரின் அவசியம் குறித்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் சங்கச் செயலா் சுதா்ஷினி நன்றி கூறினாா்.