மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
புதுகையில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலை புதுக்கோட்டையில் அனைத்து வங்கி ஊழியா் மற்றும் அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை கீழராஜவீதியிலுள்ள எஸ்பிஐ வங்கிக் கிளை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.என். ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
அனைத்து வங்கிகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். வங்கிகளில் தற்போது பணியாற்றி வரும் தற்காலிக ஊழியா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். வாரத்தின் 5 நாள்கள் மட்டுமே பணி நாள்களாக அறிவிக்க வேண்டும்.
அனைத்து வங்கிகளிலும் இயக்குநா் குழுவில் ஊழியா் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.