ஜீ தமிழில் கூடுதல் நேரம் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்! காரணம் என்ன?
புதுக்கடை அருகே மீனவா் தற்கொலை
புதுக்கடை அருகே ராமன்துறை பகுதியில் மீனவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
ராமன்துறை பகுதியைச் சோ்ந்த மீனவா் அந்தோணிபிள்ளை (64). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா்.
இவா் சில நாள்களாக மனமுடைந்தநிலையில் காணப்பட்டாராம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.