செய்திகள் :

புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விசாரணை!

post image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து நேற்றைய தினம் 27 விசைப்படகுகளில் மீனவர்கள் அரசு அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில், குமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் நான்கு நபர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அதில், வெற்றிவேல் (வயது: 27) என்பவர் ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவில் விசைப்படகின் ப்ரோபோலரின் வலை சிக்கியதை கடலுக்குள் இறங்கி எடுக்கச் சென்றபோது, உள்ளே சிக்கி இறந்த நிலையில் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டார்.

vetrivel

ஆனால், அவர் படகின் காற்றாடியில் பட்டு உயிரிழந்தது தெரியவந்ததால், இதைப் பார்த்த உறவினர்களும், சக மீனவர்களும் கதறி அழுதனர். இது குறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மேற்கொண்டு அவரது உடல் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படுவதற்காக மணல்மேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மீனவர் ஒருவர் படகின் காற்றாடியில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Train travel: மதிமுக எம்.பி துரை வைகோ பெயரில் போலி இ.கியூ கடிதம்... ரயில் பயணத்தில் சிக்கிய இளைஞர்!

கடந்த, 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ஆம் தேதி சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பொதிகை விரைவு ரயிலில் ஸ்டீபன் சத்தியராஜ் என்ற பயணிக்கு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் லெட்டர் பேடில் ... மேலும் பார்க்க

ஜகபர் அலி கொலை வழக்கு: குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த மங்களூருவைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. அ.தி.மு.க-வில் சிறுபான்மை பிரிவில் ஒன்றிய பொறுப்பு வகித்து வந்த இவர், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். அந்தப் ப... மேலும் பார்க்க

போட்டோ எடுத்து மிரட்டி சிறுமியை பாலியல் கொடுமை செய்த இளைஞர் -போக்சோ வழக்கில் கைது!

தஞ்சாவூர் பூமால் ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன்(22). இவர் மளிகைக்கடை ஒன்றில் பொருள்கள் டோர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 17 வயது சிறுமி ஒருவரை இவர் காதலித்ததாக சொல்லப்ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; ரவுடிக்கு கை, கால் முறிவு -நடந்தது என்ன?

கடந்த 2-ம் தேதி இரவு 11.00 மணி, ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது 2 பெட்ரோல் குண்டுகளை இளைஞர்கள் சிலர் வீசிவிட்டு தப்பிஓடினர்.இரவு ரோந்துப் பணிக்கு காவலர்கள் சென்றுவிட்டதால் முதல் நிலைக் காவலர்... மேலும் பார்க்க

சென்னை: அண்ணா சாலையில் ஸ்பைடர் மேனாக வலம் வந்த சுவீட்ஸ் கடைக்காரர் - பிடித்துச் சென்ற போலீஸார்

சென்னை அண்ணாசாலையில் ஸ்பைடர் மேன் உடையணிந்தவர், அவ்வழியாக சென்றவர்களிடம் படத்தில் வருவது போல் அங்கும் இங்கும் குதித்து காண்பித்தார். குழந்தைகளைப் பார்த்ததும் படத்தில் வரும் ஸ்பைடர் மேனாகவே அந்த நபர் ம... மேலும் பார்க்க

கூகுளில் ஹோட்டல் புக் செய்தபோது 93,000 ரூபாயை இழந்த இளம்பெண் - என்ன நடந்தது?

இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மோசடிகளால் பணத்தை இழப்பது மிகவும் எளிதாகிவிட்டது. சைபர் கிரைமில் ஈடுபடுபவர்கள் அசலை போன்று நகலை உருவாக்கி நம்ப வைத்து அதன்மூலம் பண மோசடி செய்கின்றனர்.அப்படித்தான் கூகுள... மேலும் பார்க்க