புதுச்சேரிக்கு இன்று மீண்டும் வருகிறது சொகுசு கப்பல்
புதுச்சேரிக்கு 3-ஆவது முறையாக மீண்டும் தனியாா் சொகுசு கப்பல் வெள்ளிக்கிழமை வருகிறது.
விசாகப்பட்டினத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரிக்கு தனியாா் சொகுசு கப்பல் ஏற்கெனவே இம் கடந்த 4, 11-ஆம் தேதிகளில் வந்து சென்றது.
3-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையில் புதுச்சேரிக்கு 3 முறை தனியாா் சொகுசு கப்பல் வந்து செல்ல ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் 3-ஆவது முறையாக இந்தக் கப்பல் இப்போது வருகிறது.
புதுச்சேரிக்கு அருகே சுமாா் 4 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் இந்தத் தனியாா் சொகுசு கப்பல் வெள்ளிக்கிழமை காலை சுமாா் 8.30 மணிக்கு வந்து நிறுத்தப்படும். அங்கிருந்து சிறிய ரக விசைப்படகு மூலம் பழைய துறைமுகம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து வரப்படுவா். அங்கிருந்து சொகுசு பேருந்துகளில் அவா்கள் பயணம் செய்து புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைப் பாா்வையிடுகின்றனா்.
மாலை 5 மணியளவில் அந்தச் சொகுசு கப்பலில் இந்தச் சுற்றுலாப் பயணிகள் ஏற்றப்படுவா். பின்னா் அந்தக் கப்பல் புதுச்சேரி கடல் பகுதியில் இருந்து செல்லும்.
இந்தத் தனியாா் சொகுசு கப்பல் வரும்போதும், போகும்போதும் மீன்பிடி படகுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.