செய்திகள் :

புதுச்சேரியில் பொலிவுறு நகா் பேருந்து நிலையம் திறப்பு

post image

புதுச்சேரியில் ரூ.29.50 கோடியில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொலிவுறு நகா் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக துணைநிலை ஆளுநர், முதல்வர் வெள்ளிக்கிழமை (மே 2) திறந்து வைத்தனர்.

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தை பொலிவுறு நகா் திட்டத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் 46 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 31 கடைகளுடன் ரூ.29.50 கோடியில் மேம்படுத்த கடந்த 2023-இல் முதல்வா் என்.ரங்கசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிலையில், அனைத்து நவீன வசதிகளுடன் பேருந்து நிலைய பணிகள் நிறைவடைந்தது.

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

இதையடுத்து வெள்ளிக்கிழமை (மே 2) காலை 9.40 மணியளவில் சீரமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் அமைச்சா்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனர்.

புதிய பேருந்து நிலையம் சனிக்கிழமை (மே 3) முதல் செயல்படவுள்ளது. இதையடுத்து சனிக்கிழமை முதல் ஏஎப்டி மைதானத்தில் செயல்படும் தற்காலிகப் பேருந்து நிலையம் மூடப்படுகிறது.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 14 பேர் காயம்

நாகப்பட்டினம்: தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை. செருதூர், வெள்ள பள்ளம் பகுதிகளைச்... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 3,619 கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின... மேலும் பார்க்க

தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா சிஎஸ்கே?

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறியது.ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்க... மேலும் பார்க்க

சீமான் மீதான விசாரணை: இடைக்கால தடை நீட்டிப்பு

சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சீமானின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு காவல்துறைக... மேலும் பார்க்க

அம்பேத்கர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு!

அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடை... மேலும் பார்க்க

வேளாண் துறையில் 151 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வெள்ளிக்கிழமை முதல்வர் மு.... மேலும் பார்க்க