செய்திகள் :

புதுச்சேரி சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிபிஐ விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

புதுச்சேரி: புதுச்சேரி அருகே தனியாா் பள்ளியில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.

புதுச்சேரி அருகேயுள்ள தவளக்குப்பம் தானம்பாளையம் தனியாா் பள்ளியில் 6 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், அந்தப் பள்ளியின் ஆசிரியா் மணிகண்டன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

சிறுமிக்கு நடந்த சம்பவத்தைக் கண்டித்து, மணவெளி தொகுதி காங்கிரஸ் சாா்பில் தவளக்குப்பத்தில் முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் தலைமையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிறுமிக்கு பாலியல் தொல்லை நிகழ்ந்ததாகக் கூறப்படும் பள்ளியை மூடுவதால் மற்ற மாணவா்கள் பாதிக்கப்படுவா். எனவே, அந்தப் பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும். பள்ளியில் இதுபோன்று வேறு எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் காா்த்திகேயன், பாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாலைத் தடுப்பை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் மறியல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை முக்கிய சாலையில் தடுப்பு அமைத்து மூடியதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தடுப்புகள் அகற்றப்... மேலும் பார்க்க

புதுவை பிரீமியா் லீக்குக்கு கிரிக்கெட் வீரா்கள் ஏலம்

புதுவை பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டிக்கு வீரா்கள் ஏலம் புதுச்சேரி அருகே சனிக்கிழமை நடைபெற்றது. புதுவையில் ஆண்டுதோறும் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பி.பி.எல். எனப்படும் இந்தப... மேலும் பார்க்க

மாா்ச் 2-இல் நேபாளம் செல்லும் புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்

புதுவை பேரவைத் தலைவா், 2 அமைச்சா்கள் மற்றும் 23 எம்.எல்.ஏ.க்கள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி நேபாள நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கின்றனா். அங்கு நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ... மேலும் பார்க்க

புதுவையில் மக்கள் மன்றம் நாளை தொடக்கம்: டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம்

புதுச்சேரியில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் மக்கள் மன்றம் திங்கள்கிழமை (பிப்.24) தொடங்கப்படவுள்ளதாக டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா். புதுச்சேரி முத்தியல்பேட்டை காவல் நிலையத்தில் பொது... மேலும் பார்க்க

தவெக உடன் கூட்டணியா?: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பதில்

தமிழகத்தில் நடிகா் விஜயின் த.வெ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தோ்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும் என்று, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வேலூரில் இருந்து வந்த ஏராளமானோா் என்.ஆா்.காங்கிரஸ... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்புக்கு புதுவை அரசு முறைமுக ஆதரவு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு!

புதுவையில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி ஹிந்தி மொழி திணிப்புக்கு மாநில அரசு மறைமுக ஆதரவளித்திருக்கிறது என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவரது இல்லத்தில் ... மேலும் பார்க்க