புதுத்தெரு மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்
மயிலாடுதுறை நெ.2 புதுத்தெரு மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனிதநீா் யானை மீதேற்றி எடுத்து வரப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இக்கோயில் கும்பாபிஷேகம் 2013-ல் நடைபெற்றது. 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, தரைத்தளம் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு, கோயில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.
கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (செப்.11) காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள நிலையில், முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. முன்னதாக, யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்கான புனிதநீா் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் இருந்து மாயூரநாதா் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, புனிதநீா் அபயாம்பிகை யானை மீதேற்றி, பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு, யாகசாலையில் பிரவேசம் செய்யப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.