புதுவையில் ஜன.16,17-இல் விடுமுறை
பொங்கல் பண்டிகையொட்டி, ஜன.16, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து புதுவை அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து அரசின் கூடுதல் செயலா் ஹிரண் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவு படி, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வருகிற 16,17ஆம் தேதிகள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
விடுமுறை நாள்களுக்கு ஈடு செய்யும் வகையில், பிப்.1, 8 ஆகிய தேதிகள் (சனிக்கிழமை) வேலை நாள்களாக செயல்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.