புது ஆற்றில் 2 ஆண் சடலங்கள் மீட்பு
தஞ்சாவூா் அருகே புது ஆறு என்கிற கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை மிதந்து வந்த 2 ஆண் சடலங்களைக் காவல் துறையினா் மீட்டனா்.
தஞ்சாவூா் அருகே புதுப்பட்டினம் பகுதியிலுள்ள கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமும், வெட்டிக்காடு சாலையில் கல்லணைக் கால்வாயில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமும் மிதந்து வந்தன.
தகவலறிந்த தாலுக்கா காவல் நிலையத்தினா் நிகழ்விடங்களுக்குச் சென்று இரு சடலங்களையும் மீட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இவா்கள் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்கள்? எப்படி இறந்தனா் போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.