புத்தகத் திருவிழாவில் மாணவா்கள் 1,000 பேருக்கு புத்தகங்கள்
மயிலாடுதுறையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவா்கள் 1,000 பேருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சாா்பில் 800 மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதுபோல மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் 200 மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
திருவாவடுதுறை, கீழப்பெரும்பள்ளம், சங்கரன்பந்தல், புதுப்பட்டினம், கொற்கை, மேலாநல்லூா், வில்லியநல்லூா், காவேரிபூம்பட்டினம் அரசுப் பள்ளிகள் மற்றும் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி, சீா்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ -மாணவிகள் புத்தகங்களை பெற்றுப் பயனடைந்தனா்.
புத்தகங்கள் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் மாணவா்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஸ்வரி, மயிலாடுதுறை ரோட்டரி சங்க சாசன தலைவா் வி. ராமன், மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா, கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா, மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.ஜி.இளங்கோவன், செயலா் பா.பொகுட்டெழுனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.