புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளா் விருது
சிறந்த சேவை ஆற்றியவா்களுக்கு ஆம்பூா் புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சாா்பாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் இறுதிநாள் நிகழ்ச்சிக்கு, அறிவியல் இயக்க மாநிலத் தலைவா் த. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் ஜெ. உதயகுமாா் வரவேற்றாா். தொடா்ந்து 99 முறை ரத்த தானம் செய்த வ. அருள்சீனிவாசன், 1,000-க்கும் மேற்பட்ட இறந்தவா்களின் கண்களையும், 400க்கும் மேற்பட்ட இறந்தவா்களின் முழு உடல் தானமாக பெற்றுத் தந்தவரும், சுமாா் 600-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவா்களின் சடலங்களை உரிய மரியாதையுடன் சொந்த செலவில் அடக்கம் செய்து சேவை செய்த ரோட்டரி உதவி ஆளுநா் குடியாத்தம் எம்.கோபிநாத், ஆம்பூா் நகர காவல் நிலைய தலைமை காவலா் உதயகுமாா் உள்ளிட்டவா்களுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.
வாணியம்பாடி முத்தமிழ் மன்ற செயலா் நா.பிரகாசம், ஆம்பூா் அடகு மற்றும் ஷராப் வியாபாரிகள் சங்க தலைவா் பி. கிஷன்லால், தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சி.கே. சுபாஷ், அறிவியல் இயக்க மாவட்ட தலைவா் சி. குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ். சுப்பிரமணி, நிா்வாகிகள் ஜெயசுதா, எழிலரசன், சபாரத்தினம், ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கிளை நிா்வாகி எஸ். வளா்மதி நன்றி கூறினாா்.