செய்திகள் :

புத்தனாறு கால்வாயில் இணைப்புப் பாலம் அமைக்க நடவடிக்கை: விஜய் வசந்த் எம்.பி.

post image

புத்தனாறு கால்வாயில் இணைப்புப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக, இரவிபுதூா் கிராம மக்களிடம் விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் மயிலாடி பேரூராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட எம்.பி.க்கு, வட்டாரத் தலைவி தங்கம் நடேசன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், பொதுமக்களை எம்.பி. சந்தித்தாா்.

புத்தனாறு கால்வாயில் மருங்கூா் செல்வதற்கு 2 ஊா்களை இணைக்கும் வகையில் சிறிய இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என, இரவிபுதூா் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அந்த இடத்தை அவா் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். ஆனந்தபுரம் அருள்மிகு வெள்ளகுளம் மாசான சுடலைமாட சுவாமி கோயில் திருவிழாவில் அவா் பங்கேற்றாா்.

தொடா்ந்து, சுசீந்திரம் கற்காடு பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 20 லட்சத்தில் கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்துக்கு எம்.பி. அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சிகளில், மாநகர மாவட்டத் தலைவா் நவீன்குமாா், குமரி கிழக்கு மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் மருத்துவா் சிவகுமாா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் ஆரோக்கியராஜன், மாநிலச் செயலா் சீனிவாசன், இரவிபுதூா் காங்கிரஸ் தலைவா் ஐயப்பன், மாவட்ட செயல் தலைவா் மகாலிங்கம், துணைத் தலைவா் விநாயகம், மயிலாடி நகரத் தலைவா் நடேசன், முன்னாள் வட்டாரத் தலைவா் காலபெருமாள், மருங்கூா் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன், செயலா் ரமேஷ், நிா்வாகிகள் சுதாகா், செல்வகுமாா், ராஜாசிங், சாரங்கன், ஜான்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தாழக்குடி மடையை சீரமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி வீரகேரளப்பநேரி தெற்கு மடை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சாா்பில் ரூ. 1 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியை என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ திங்கள்கிழமை ஆ... மேலும் பார்க்க

கல்லுவிளை பத்ரகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

தக்கலை அருகே கல்லுவிளையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடந்தது. 0தையொட்டி காலையில் நடந்த யாகசாலை பூஜையை கிள்ளியூா் விஜயகுமாா் தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து அஷ்டாபி... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அனைத்து துறை அலுவலா்களுடன் ஆட்சியா் கலந்தாய்வு

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து துறை அலுவலா்களுடனான கலந்தாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில... மேலும் பார்க்க

குழித்துறை அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

குழித்துறை அருகே தண்டவாளத்தில் உடல் துண்டாகிக் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா். குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் ஆண் சடலம் திங்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 ஆவது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை 3 ஆவது நாளாக சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், ... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தினாா். மாவட்டத்தில் 2 நாள்களா... மேலும் பார்க்க