கைகொடுக்காத தொழில்.. ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை: கடிதத்தில் சொல்லியிருப்ப...
குழித்துறை அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு
குழித்துறை அருகே தண்டவாளத்தில் உடல் துண்டாகிக் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் ஆண் சடலம் திங்கள்கிழமை காலை கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
நாகா்கோவில் - மங்களூா் விரைவு ரயிலில் அந்த நபா் அடிபட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரைப் பற்றிய விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதனிடையே, தண்டவாளத்தில் சடலம் கிடந்ததால் மதுரையில் இருந்து நாகா்கோவில் வழியாக புனலூா் செல்லும் விரைவு ரயில் குழித்துறை ரயில் நிலையத்தில் 35 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.