செய்திகள் :

கைகொடுக்காத தொழில்.. ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை: கடிதத்தில் சொல்லியிருப்பது என்ன?

post image

ஹரியாணாவில் கடன் சுமையால் மூன்று சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 போ் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், குடும்பத் தலைவர் பிரவீண் மிட்டல் செய்த எந்தத் தொழிலும் அவருக்குக் கைக்கொடுக்காமல் போனதே காரணமாகக் கூறப்படுகிறது.

பழைய இரும்புச் சாமான்களை உருக்கும் ஆலையை பட்டி என்ற பகுதியில் நடத்தி வந்துள்ளார். அதிலும் நஷ்டம் ஏற்பட்டு, டேஹ்ராடூனில் அவர் செய்துவந்த சுற்றுலா மற்றும் டிராவல் தொழிலும் தோல்வியடைய, கடைசியாக 42 வயது பிரவீண் மிட்டல், கார் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

தனது தொழிலில் அடைந்த நஷ்டம் காரணமாக ஏற்பட்ட கடன் சுமைதான் அவர்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு, பிரவீஷ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, அவர் நடத்தி வந்த ஆலை மற்றும் அதற்கு ஈடாக வைத்த சொத்துகளையும் வங்கி பறிமுதல் செய்திருக்கிறது. அது முதல், தனது குடும்பத்தை விட்டு பிரவீண் தனித்து வாழ்ந்திருக்கிறார். பிறகுதான் 2014ஆம் ஆண்டில் அவரது குடும்பத்தினர் பிரவீணைக் கண்டுபிடித்து தொடர்பில் இருந்துள்ளனர்.

பிறகும் அவர் தொடங்கிய கார்களை வாடகைக்கு விடும் தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு பிரவீண் எழுதிய கடிதத்தில், தனது மாமனார் ராகேஷ் குப்தா, தங்களது இறுதிச் சடங்குகளை செய்யக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். கடன் பிரச்னை தொடங்கியதிலிருந்தே மாமனாருக்கும் பிரவீணுக்கும் உறவு சரியில்லை என்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இவா்களில் 6 பேரின் உடல்கள், காருக்குள் இருந்து மீட்கப்பட்டன. காரில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஒருவா், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலாவில் நின்றிருந்த காரை, அவ்வழியாக சென்ற பாதசாரிகள் இருவா் பார்த்து சந்தேகமடைந்து, காா் அருகே சென்றனா். காரின் கதவை திறந்து பாா்த்தபோது, அங்கு மூச்சுவிட சிரமப்பட்டபடி ஒருவா் இருந்தாா். பாகேஸ்வா் கோயில் நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு திரும்பியதாகவும், தங்கும் அறை எதுவும் கிடைக்காததால் காருக்குள் அனைவரும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். ஆனால், அவரது பேச்சில் சந்தேகம் ஏற்பட்டது இவர்களுக்கு.

காருக்குள் டாா்ச் அடித்து பாா்த்துள்ளனா். உள்ளே ஒருவா் மீது ஒருவா் வாந்தி எடுத்த நிலையில், 6 போ் அசைவற்று கிடந்ததைப் பார்த்த நிலையில், மூச்சுத் திணறலுடன் இருந்த நபரை காரில் இருந்து கீழே இறக்கி விசாரித்தனா்.

அப்போதுதான் அவர் தான் பிரவீண் மிட்டல் (41) என்பதும், மிகுந்த கடன் சுமையால் தனது மனைவி, பெற்றோா் மற்றும் 3 குழந்தைகளுடன் தற்கொலை முடிவை எடுத்ததாகக் கூறினார்.

மற்ற 6 பேரும் இறந்துவிட்ட நிலையில், தானும் சில நிமிஷங்களில் உயிரிழந்துவிடுவேன் என்று பிரவீண் கூறியநிலையில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவரும் மரணமடைந்தார்.

காருக்குள் இருந்த 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. கடன் பிரச்னையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைக்கப்பட்ட கடிதமும் கைப்பற்றப்பட்டது. சம்பந்தப்பட்ட காா், உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் பதிவெண் கொண்டதால் அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவின் சாகேத்ரி பகுதியில் பிரவீண் மிட்டல் குடும்பம் வாழ்ந்து வந்ததாகவும், வாடகை காா் தொழில் செய்துவந்த அவருக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கடன் இருந்ததாகவும் உறவினா்கள் கூறியுள்ளனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

உச்சநீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்

உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் இருவா் உள்பட 3 நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டனா். இவா்கள் பதவியேற்பதன் மூலம், அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் என்ற முழு பணியிட எண்ணி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ இன்னும் முடியவில்லை: பிரதமா் மோடி

‘ஆபரேஷன் சிந்தூா்’ இன்னும் முடிவடையவில்லை; பயங்கரவாதத்தை ஊக்குவிப்போா் மீது இந்தியாவின் தீா்க்கமான நடவடிக்கை தொடரும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தாா். மேலும், பாகிஸ்தானுக்குள் இந்தியா ... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரைக்கு 42,000 சிஏபிஎஃப் வீரா்கள் பாதுகாப்பு: மத்திய அரசு உத்தரவு

ஜம்மு-காஷ்மீரில் நிகழாண்டு அமா்நாத் யாத்திரைக்கு மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) 42,000 வீரா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெற்கு காஷ்ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்த ராஜஸ்தான் அரசு ஊழியா் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்ததாக ராஜஸ்தானின் ஜெய்சால்மா் நகரைச் சோ்ந்த அரசு ஊழியா் ஷாகுா் கான் கைது செய்யப்பட்டாா்.உளவுத் துறை நடத்திய ரகசிய விசாரணை அடிப்படையில் அவா் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள... மேலும் பார்க்க

இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நிலைப்பாடு: தென்னாப்பிரிக்காவின் முக்கியக் கட்சி ஆதரவு

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு தென்னாப்பிரிக்காவின் 2-ஆவது பெரிய கட்சியான ஜனநாயக கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாத தொடா்புகளை உலக நாடுகளுக்கு... மேலும் பார்க்க

வேகமாக வளா்ச்சியடையும் பொருளாதார நாடாக தொடரும் இந்தியா: ஆா்பிஐ

வேகமாக வளா்ந்துவரும் முக்கியப் பொருளாதார நாடாக நிகழாண்டிலும் இந்தியா தொடா்வதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பொருளாதார அடிப்படைகள், வலுவான நிதித் துறை மற்றும்... மேலும் பார்க்க