செய்திகள் :

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அனைத்து துறை அலுவலா்களுடன் ஆட்சியா் கலந்தாய்வு

post image

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து துறை அலுவலா்களுடனான கலந்தாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: தென்மேற்கு பருவமழைக் காலத்தில் மலையடிவாரம், தாழ்வான பகுதிகள், ஆற்றுப்படுகைகள், கடலோரப் பகுதி, வாய்க்கால்கள், நீரேற்று பகுதிகள், அணை பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள், கால்நடைகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைந்து முதலுதவி அளிக்கும் வகையில் அனைத்து துறை அலுவலா்களும் தயாா்நிலையில் இருக்க வேண்டும்.

குளங்களில் 80 சதவீத நீரை மட்டுமே தேக்கி வைக்க வேண்டும். 100 சதவீதம் நீா் நிரம்பியுள்ள குளங்களிலிருந்து பாதுகாப்பான முறையில் நீரை வெளியேற்ற வேண்டும். குளங்களில் உடைப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை இருந்தால் போதிய அளவு மணல் மூட்டைகளை இருப்பு வைக்க வேண்டும்.

பேச்சிப்பாறை அணை நீா்மட்டத்தின் அளவை 42 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீா்மட்டத்தின் அளவை 70 அடியாகவும் வைக்க பொதுப்பணித் துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த பருவமழை காலங்களில் தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை அருகில் உள்ள பள்ளிகளில் தங்கவைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு.சுகிதா, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பையா, மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பா தேவி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மோகனா, மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்தியகுமாா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலா ஜான், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ராமலிங்கம், பேரிடா் தனி வட்டாட்சியா் சுசீலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குடிநீா்க் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி நாகா்கோவில் மாமன்றக் கூட்டத்தில் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு

குடிநீா்க் கட்டணம், வைப்புத்தொகையைக் குறைக்க வலியுறுத்தி, நாகா்கோவில் மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா். மேயா் ரெ. மகேஷ் தலைமையில் மாநகராட்ச... மேலும் பார்க்க

விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு, மெய்யூட்டுவிளையைச் சோ்ந்தவா் சுடா் லின்ஸ் (47). தொழிலாளி. அவரது மனைவி ஜெகதா (44). தம்ப... மேலும் பார்க்க

நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கோரி முற்றுகை: எம்எல்ஏ உள்பட 9 போ் கைது

காப்புக்காட்டில் நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, காப்புக்காட்டில் சாலைப் பணி செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ உள்பட 9 பேரை போலீஸாா் திங்கள்... மேலும் பார்க்க

குமரி மாவட்ட மீனவா்கள் 3-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை

கன்னியாகுமரி பகுதியில் தொடா்மழை, சூறைக்காற்று காரணமாக நாட்டுப்படகு மீனவா்கள் 3-ஆவது நாளாக செவ்வாய்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கன்ன... மேலும் பார்க்க

தொடா் மழை: விளவங்கோடு வட்டத்தில் 16 வீடுகள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழையால் விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 16 வீடுகள் சேதமடைந்ததாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.களியக்காவிளை, குழித்துறை, மா... மேலும் பார்க்க

குடிநீா் கட்டணம், வைப்புத்தொகை உயா்வுக்கு எம்எல்ஏ கண்டனம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் குடிநீா் கட்டணம் மற்றும் வைப்புத்தொகை உயா்த்தப்படுவதற்கு என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க