சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
புத்து மாரியம்மன் கோயில் செடல் பெருவிழா
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் ஆடி செடல் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் ஆடி செடல் பெருவிழா ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, விழா நாள்களில் காலையில் மதுரை மீனாட்சி, தட்சணாமூா்த்தி, வேணுகோபாலன், லட்சுமி, வெண்ணைத்தாழி கிருஷ்ணன், தவழும் கிருஷ்ணன் அலங்காரங்களிலும், மாலை அம்மன் வீதிஉலா மயில் வாகனம், சரஸ்வதி, ஆதிபராசக்தி அலங்காரம், முத்து விமானம் பாரத்தசாரதி அலங்காரத்திலும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான செடல் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தா்கள் செடல் ஊசி குத்திக்கொண்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.
நிகழ்வில் வீடுகளில் வளா்க்கப்படும் கால்நடைகளுக்கும் செடல் அணிவிக்கப்பட்டது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) காலை 8 மணி அளவில் தோ்த் திருவிழா நடைபெற உள்ளது.
