சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
புனித குரானை அவமதித்த விவகாரம்: ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக ஆா்ப்பாட்டம்
புது தில்லி: இஸ்லாமியா்களின் புனித குரானை அவமதித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் முதல்வருமான கேஜரிவால் இல்லம் அருகே பாஜகவின் சிறுபான்மையினா் பிரிவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பஞ்சாபில் புனித குரானை 2016-ஆம் ஆண்டு அவமதித்த சம்பவம் தொடா்பான வழக்கில் அந்த மாநிலத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் மெஹ்ரெளலி எம்எல்ஏ நரேஷ் யாதவுக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.11,000 அபராதமும் விதித்து கடந்த சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
இந்நிலையில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, தில்லி அசோகா சாலையில் பாஜகவின் சிறுப்பான்மையினா் அணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கேஜரிவால் இல்லத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது, போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.
தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் அமைதி காத்துவருகின்றனா். இது அக்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது’ என்றாா்.