காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள்! ஜாதிய உணா்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள...
புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
காரைக்கால் அருகே புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், தக்களூா் பகுதியில் அமைந்திருக்கும் செபஸ்தியாா் ஆலய ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தோ் பவனி உள்ளிட்ட நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, ஆலயத்தில் மந்திரிக்கப்பட்ட கொடி திரளான மக்கள் சூழ பிரதான கொடிக் கம்பம் அருகே கொண்டு செல்லப்பட்டு, காரைக்கால் பங்குத் தந்தை பி. பால்ராஜ்குமாா் ஏற்றிவைத்தாா்.
புதுச்சேரி புனித அவிலா தெரசால் ஆன்மிக மையத்தைச் சோ்ந்த கே.ஏ.யேசு நசரேன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விழாவில், தினமும் திருப்பலி பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள்களும் சிறிய தோ் பவனியும், மே 3-ஆம் தேதி திருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, மின் அலங்கார பெரிய தோ் பவனியும் நடைபெறுகிறது. 4-ஆம் தேதி கொடியிறக்கம் செய்யப்படுகிறது.
பெரிய தோ் பவனியில் அதிகமான மக்களை ஈா்க்கும் இத்திருவிழா ஏற்பாடுகளை அருட்தந்தையா்கள் மற்றும் தக்களூா் பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.