Sriram Krishnan: SRM மாணவர், யூடியூபர், மஸ்கின் நண்பர்... ட்ரம்பின் ஆலோசகர் - யா...
புனே: குடிபோதையால் விபரீதம்; சாலையோரம் உறங்கியவர்கள் மீது லாரி மோதி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி!
புனேயில் இன்று காலையில் நடந்த விபத்தில் டிப்பர் லாரியொன்று சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. புனே வகோலி என்ற இடத்தில் சாலையோரம் கட்டுமானத் தொழிலாளர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிக்கொண்டது. இதில் ஒன்று மற்றும் இரண்டு வயது குழந்தைகள் இரண்டு பேர் உயிரிழந்தனர். விஷால் பவார் (22) என்பவரும் லாரி மோதியதில் இறந்து போனார். இது தவிர உறங்கிக்கொண்டிருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். போலீஸ் நிலையம் அருகில் அதிகாலையில் 12.30 மணிக்கு நடந்த இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு சம்பவ இடத்தில் இருந்து டிரைவர் தப்பிச் செல்ல முயன்றார். அவரை அப்பகுதி மக்கள் பிடித்துக்கொண்டனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் விரைந்து வந்த போலீஸார் டிரைவரைக் கைது செய்து அவர் மது போதையில் இருந்தாரா என்பதை அறிந்து கொள்ள மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கின்றனர்.
சோதனையில் அவர் மது அருந்தி இருந்தது தெரிய வந்தது. விபத்தில் காயம் அடைந்தவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. விபத்து நடந்ந இடத்தில் 100-க்கும் அதிகமானோர் உறங்கிக்கொண்டிருந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். அவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் அமராவதியில் இருந்து கூலிவேலைக்காக புனே வந்திருந்தனர். தங்க இடம் இல்லாமல் சாலையோரம் குடும்பத்தோடு உறங்கிக்கொண்டிருந்தனர். கிடைக்கும் வேலைக்குச் செல்வது வழக்கம். சமீபத்தில் மும்பையில் மாநகராட்சி பஸ் டிரைவர் ஒருவர் மக்கள் நெருக்கடி மிகுந்த மார்க்கெட் பகுதியில் கண்மூடித்தனமாக பஸ்ஸை ஓட்டியதில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.