தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision - சிக்கலும் சந்தேகமும் | Decode
பும்ரா இல்லாமல் இந்திய அணி 70% வெற்றி... ரசிகர்கள் அதிர்ச்சி!
ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜஸ்பிரீத் பும்ரா இந்திய டெஸ்ட் அணியில் ஜனவரி 5, 2018ஆம் ஆண்டு அறிமுகமானார். இவரது வித்தியாசமான பந்துவீச்சு பாணி பலரையும் அச்சுறுத்தியது.
வலது கை வேகப் பந்துவீச்சாளரான பும்ரா டெஸ்ட்டில் 46 போட்டிகளில் விளையாடி 210 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக பும்ரா விளையாடிய முதல் போட்டியில் இந்திய அணி தோற்க, பும்ரா இல்லாமல் விளையாடிய இந்திய அணி 2-ஆவது டெஸ்ட்டில் வென்றது.
பும்ரா அறிமுகமானதில் இருந்து இந்திய அணிக்கு 46 போட்டிகளில் விளையாடியுள்ளதில் 20 போட்டிகள் மட்டுமே வென்றுள்ளது.
பும்ரா இல்லாமல் இந்திய அணி 27 போட்டிகளில் 19 -இல் வென்று அசத்தியுள்ளது.
பும்ராவுடன் இந்திய அணி - 46-இல் 20 வெற்றி, 22 தோல்வி, 5 சமன்.
பும்ரா இல்லாமல் இந்திய அணி - 27-இல் 19 வெற்றி, 5 தோல்வி, 3 சமன்.
பும்ரா விளையாடினால் வெற்றி சதவிகிதம் 43 -ஆகவும், பும்ரா இல்லாவிட்டால் வெற்றி சதவிகிதம் 70-ஆகவும் இருக்கிறது.
இங்கிலாந்துடன் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில், அடுத்த போட்டியில் பும்ரா விளையாடவிருக்கிறார்.