செய்திகள் :

பும்ரா ஓவரில் அடித்தது எப்படி? ஆஸி. வீரர் விளக்கம்!

post image

பும்ராவின் ஓவரில் தைரியமாக விளையாடியது குறித்து இளம் ஆஸி. வீரர் கான்ஸ்டாஸ் எனக்கு பிடித்த ஷாட்டே ரேம்ப் ஷாட்தான் எனக் கூறியுள்ளார்.

மெல்போர்னில் இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல்நாள் முடிவில் 311/6 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் (19) சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்தார்.

பும்ராவின் ஓவரில் தைரியமாக சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். அதிலும் ரிவர்ஸ் ரேம்ப் ஷாட் அடித்தது அனைவரையும் வியக்க வைத்தது.

பும்ராவின் 4,484 பந்துகளுக்குப் பிறகு முதல் சிக்ஸர் அடித்தவர் என்ற சாதனையை சாம் கான்ஸ்டாஸ் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அதிகமாக பயிற்சி செய்துள்ளேன்

இந்த நிலையில் சாம் கான்ஸ்டாஸ் கூறியதாவது:

பும்ரா கிரிக்கெட்டின் லெஜெண்டாக இருக்கிறார். அதனால், அவர்மீது சிறிது அழுத்தத்தை அளிக்கலாம் என நினைத்தேன். அது இன்று நடந்தேறியது. நான் எப்போதும் எனக்கு நானே சவாலை அளித்துக்கொள்வேன். என்னுடைய சிறந்தவற்றை நான் வெளிக்கொணர விரும்புகிறேன். அதனால் பும்ராவின் லைனை மாற்றுவது முக்கியமானது.

நான் முதல்முறையாக பும்ராவை விளையாடுகிறேன். அதனால் அவரது ஆக்‌ஷனை பழக்கப்படுத்த வேண்டும். என்னுடைய பேட்டினை அவரது பந்து சிலமுறை மிஸ் செய்தது. முதல் சில பந்துகளில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது. இது ஒரு சிறந்த சவாலாக இருந்தது.

நான் ரேம்ப் ஷாட் அடித்து ஆட்டமிழந்திருந்தால் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருந்திருந்திருக்கும். ஏனெனில் நான் அதற்காக நிறைய பயிற்சி செய்துள்ளேன். அதுதான் எனது பாதுகாப்பான ஷாட் என்பேன். இளமையாக இருப்பதன் அழகு அதுதான். அது சிறிது எளிமையானது. பந்துவீச்சாளருக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்க அதுதான் எனது சிறந்த வழி.

மோதல் நல்லது

நான் எனது கையுறைகளை சரிசெய்து வந்துகொண்டிருந்தேன். விராட் தெரியாமால் மோதிவிட்டதாக நினைக்கிறேன். கிரிக்கெட்டில் மிகுந்த உணர்ச்சியில் அப்படி நடக்கும்.

என்னைப் பொறுத்தவரை சுந்தந்திரமாக விளையாட வேண்டும். எனக்கு சில ரன்கள் அதிர்ஷ்டவசமாகவும் வந்தன. நான் யாருடைய ஓவரை விளையாடினாலும் சவால் அளிக்க விரும்புகிறேன். என்னுடைய சிறந்த செயல்பாடுகளை அளிக்க முயற்சிக்கிறேன்.

அது சில நேரங்களில் மோதல்களில் முடிகிறது. அதுவும் எனக்கு நல்லதுதான். அதுதான் எனது சிறந்த பங்களிப்பை வெளிக்கொணரும் என நினைக்கிறேன்.

கம்மின்ஸும் அணி வீரர்களும் என்னிடம் நன்றாக பழகுகிறார்கள். நான் நானாக இருக்கிறேன். அதிகமாக ரன்கள் குவித்ததால்தான் இங்கு இருக்கிறேன். நான் செய்வதற்கு இதுதான் சரியான கணம் என நினைக்கிறேன். அது நடந்தும்விட்டது என்றார்.

முதல் டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பாகிஸ்தான்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போ... மேலும் பார்க்க

“தேவையற்ற ரிஸ்க்...” யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட் குறித்து முன்னாள் இந்திய கேப்டன்!

யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனது தேவையற்ற ரிஸ்க் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னி... மேலும் பார்க்க

ஃபார்மில் இல்லாத வீரர்களை நீக்குங்கள்! - முன்னாள் இந்திய கேப்டன்

ஃபார்மில் இல்லாத வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா -ஆஸ்திரேலியா மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா 90 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 90 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்க... மேலும் பார்க்க

மூவர் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 586 ரன்கள் குவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும்... மேலும் பார்க்க

ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆட்டத்தின் மிகப் பெரிய தருணம்: ஸ்டீவ் ஸ்மித்

யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று (டி... மேலும் பார்க்க