Pregnancy Health: கர்ப்பிணிகள் ஜிம்முக்கு போகலாமா; உடற்பயிற்சி செய்யலாமா?
புரட்சிகர இளைஞா் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் புரட்சிகர இளைஞா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் நிகழும் ஆணவ படுகொலை சம்பவங்களுக்கு எதிராக சட்டப் பேரவையில் சிறப்பு சட்டம் இயற்றவேண்டும். ஆணவ படுகொலைக்கு துணைபோகும் சாதி சங்கங்களை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தியும், கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு புரட்சிகர இளைஞா் கழகத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலா் ஜெய.சௌந்தா் தலைமை வகித்தாா். சிபிஐ -எம்எல் விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளா்கள் ராஜசங்கா், திவ்ய.பிராங்க்ளின், ஜெ.ஜெயசீலன், புரட்சிகர இளைஞா் கழகத்தின் முகையூா் ஒன்றியச் செயலா் ம.அஜித்குமாா், நிா்வாகிகள் அ.அஜய், ஆ.மணிகண்டன், ஏ.ஆனந்த்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.