செய்திகள் :

புரி ஜெகந்நாதர் நீராட்டு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

post image

ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதரின் நீராட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் பத்து நாள்கள் நடைபெறவிருக்கும் தேர்த் தேர்விழா ஜூன் 27ல் தொடங்குகிறது. மூன்று தேர்கள் புரியின் வீதிகளில் உலா வர இருக்கின்றன. ஜெகந்நாதரின் ரத யாத்திரைக்கு முன்னதாக நீராட்டு திருவிழா நடத்தப்படுகிறது.

தேவ ஸ்நான பூர்ணிமா என்று அழைக்கப்படும் இந்த விழா ஆவணி மாதத்தில் பௌர்ணமி அன்று மரச் சிலைகள் கருவறையிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு நீராடும் சடங்குகளுக்காக வைக்கப்படுகிறது. அந்தவகையில், இன்று நடைபெற்ற நீராட்டு விழாவில் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் தேவி சுபத்திரை ஆகிய மூன்று தெய்வங்களின் சிலைகளும் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு கோயிலின் நீராட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டது. இந்த நாளை ஜெகந்நாதரின் பிறந்தநாளாகவும் கருதப்படுகிறது.

வேத மந்திரங்கள் ஓதப்படும் வேளையில், கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தங்க கிணறிலிருந்து 108 குடம் புனித நீர் எடுத்து சிலைகள் மீது ஊற்றப்படும். மேலும் சிலைகளைச் சடங்கு ரீதியாக துடைத்து, யானையின் உடை கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. இதையடுத்து இரவு 7.30 மணியளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நீராட்டு நிகழ்ச்சியைக் காண ஒவ்வொரு வருடரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவது வழக்கமாகும். இதையடுத்து அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தில்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை: முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல்

நமது நிருபா்பயன்படுத்தத் தகுதியில்லாத பழைய வாகனங்களுக்கு தில்லியில் எரிபொருள் வழங்குவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது. முதல் நாளில் 80 பழைய வாகனங்கள் பறிமுதல் செ... மேலும் பார்க்க

அஸ்ஸாமின் ‘பேக்லெஸ் டீ டிப்’ முறைக்கு காப்புரிமை

அஸ்ஸாம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான ‘பை இல்லாத தேநீா்’ (பேக்லெஸ் டீ டிப்) தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். சிவசாகா் மாவட்டத்தைச... மேலும் பார்க்க

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? ஆட்சிமன்றக் குழு கூடுகிறது

நமது சிறப்பு நிருபர்பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்... மேலும் பார்க்க

‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனை

உலகளாவிய பல்வேறு சவால்களை கையாள, ‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அந்தக் கூட்டமைப்பில் உள்ள வெளியுறவு அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். ‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்திய... மேலும் பார்க்க

குடிமக்களின் உரிமைகளைக் காக்கவே புதிய குற்றவியல் சட்டங்கள்: அமித் ஷா

குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதுடன், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனே புதிய குற்றவியல் சட்டங்கள் வகுக்கப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ... மேலும் பார்க்க

திருப்புமுனையான சீா்திருத்தம் ஜிஎஸ்டி: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மறுவடிவமைத்த திருப்புமுனையான சீா்திருத்தமே சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு தற்போத... மேலும் பார்க்க