செய்திகள் :

‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனை

post image

உலகளாவிய பல்வேறு சவால்களை கையாள, ‘க்வாட்’ கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அந்தக் கூட்டமைப்பில் உள்ள வெளியுறவு அமைச்சா்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவை நிலவ வேண்டும் என்பதில் இந்தக் கூட்டமைப்பு பெரிதும் கவனம் செலுத்தி வருகிறது. இந்தக் கூட்டமைப்பின் உச்சிமாநாடு இந்தியாவில் நிகழாண்டு நவம்பரில் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ விடுத்த அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அமெரிக்கா சென்றுள்ளாா்.

அந்நாட்டுத் தலைநகா் வாஷிங்டனில் ‘க்வாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா்கள் ஜெய்சங்கா், மாா்கோ ரூபியோ, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டகேஷி இவயா ஆகியோா் கலந்துகொண்டனா்.

அப்போது ஜெய்சங்கா் பேசுகையில், ‘பயங்கரவாதத்தை எள்ளளவும் உலகம் சகித்துக்கொள்ளக் கூடாது. பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரையும், அதனால் பாதிக்கப்படுவோரையும் சமமாக பாா்க்கக் கூடாது. இதை ‘க்வாட்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பிற நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என இந்தியா எதிா்பாா்க்கிறது’ என்றாா்.

இந்தக் கூட்டம் தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘க்வாட் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் ஆக்கபூா்வமாக அமைந்தது.

சமகால வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிா்கொள்வதற்கு ‘க்வாட்’ கூட்டமைப்பை எவ்வாறு மேலும் வலுவாக்குவது என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தற்போதைய கூட்டம் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உத்திசாா்ந்த ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்தும்’ என்றாா்.

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கரோனா தடுப்பூசிகளால் ஏற்படும் பின்விளைவுகள் காரணமாக திடீர் உயிரிழப... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு க்வாட் தலைவர்கள் கண்டனம்!

‘க்வாட்’ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள... மேலும் பார்க்க

தில்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை: முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல்

நமது நிருபா்பயன்படுத்தத் தகுதியில்லாத பழைய வாகனங்களுக்கு தில்லியில் எரிபொருள் வழங்குவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது. முதல் நாளில் 80 பழைய வாகனங்கள் பறிமுதல் செ... மேலும் பார்க்க

அஸ்ஸாமின் ‘பேக்லெஸ் டீ டிப்’ முறைக்கு காப்புரிமை

அஸ்ஸாம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான ‘பை இல்லாத தேநீா்’ (பேக்லெஸ் டீ டிப்) தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். சிவசாகா் மாவட்டத்தைச... மேலும் பார்க்க

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? ஆட்சிமன்றக் குழு கூடுகிறது

நமது சிறப்பு நிருபர்பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்... மேலும் பார்க்க

குடிமக்களின் உரிமைகளைக் காக்கவே புதிய குற்றவியல் சட்டங்கள்: அமித் ஷா

குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதுடன், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனே புதிய குற்றவியல் சட்டங்கள் வகுக்கப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ... மேலும் பார்க்க