நேபாள பயணத்தை கூடுதல் கட்டணமின்றி மாற்றியமைத்துக்கொள்ளலாம்: ஏர் இந்தியா எக்ஸ்பிர...
`புலியைப் பிடிக்க மாட்டீங்களா?' - வனத்துறை 10 பேரை புலிக்காக வைத்த கூண்டுக்குள் அடைத்த கிராம மக்கள்
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை விட்டு வெளியேறிய புலி ஒன்று கடந்த சில நாள்களாக கால்நடைகளை வேட்டையாடி வருவதாகவும் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்தப் புலியைக் பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் எனவும் வனத்துறைக்கு கிராம மக்கள் அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.
அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கர்நாடக வனத்துறையினர், புலியின் நடமாட்டத்தை உறுதி செய்து கூண்டு ஒன்றை அமைத்து கண்காணித்து வந்துள்ளனர்.

தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியைப் பிடிக்க வனத்துறை அக்கறை காட்டுவதில்லை என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கூண்டு வைக்கப்பட்டிருந்த பகுதியில் வனத்துறையினர் குழுவாகச் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அப்போது திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், வனத்துறையினர் 10 பேரையும் பிடித்து கூண்டுக்குள் அடைத்து பூட்டியுள்ளனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் பரவிய நிலையில், விரைந்து சென்ற காவல்துறையினர் மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வனத்துறையினரை கூண்டுக்குள் இருந்து மீட்டுள்ளனர்.
புலியைப் பிடிக்க வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் வனப்பணியாளர்கள் 10 பேரை கிராம மக்கள் அடைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.