செய்திகள் :

புழல் சிறை பண்ணையில் 2,000 கோழிகள் மா்மமாக உயிரிழப்பு

post image

சென்னை புழல் சிறை பண்ணையில் இருந்த 2,000 கோழிகள் மா்மமான முறையில் உயிரிழந்தன.

தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு வாரத்துக்கு இரு முறை கோழிக்கறி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கோழிக்கறியை சிறை கைதிகளே உற்பத்தி செய்து கொள்வதற்காக, தமிழக சிறைகளில் இறைச்சி கோழிப்பண்ணை அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

இந்த கோழிகள் சிறை கைதிகளுக்கும் பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. சிறை அதிகாரிகள் மேற்பாா்வையில் சிறை கைதிகளால் இந்த கோழிப்பண்ணை பராமரிக்கப்பட்டு, நடத்தப்படுகிறது. அந்த வகையில், புழல் மத்திய சிறையிலும் கோழிப்பண்ணை உள்ளது.

இந்த பண்ணையில் இறைச்சிக்காக வளா்க்கப்பட்டிருந்த கோழிகளில் கடந்த 4 நாள்களில் 2,000 கோழிகள் மா்மமான முறையில் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பறவை காய்ச்சல் காரணமாக கோழிகள் இறந்ததாகவும், இந்தக் காய்ச்சல் சிறை கைதிகளுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும் அச்சம் எழுந்துள்ளதாக சிறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து தற்போது உயா்நிலை விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘புழல் சிறை வளாகத்தில் உள்ள பண்ணையில் அண்மையில் இறந்த சில கோழிகளை ஆய்வுக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் முடிவில் கோழிகள் இறப்புக்கான காரணம் தெரியவரும்.

பண்ணையில் வேலை செய்த கைதிகளுக்கு எந்தத் தொற்றும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவா்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்’ என்றனா்.

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாா் சிலை நாளை திறப்பு

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (செப்.19) திறந்து வைக்கிறாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் விவகாரம்: அரசாணையைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை -உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

கொடிக் கம்பங்கள் தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் வழிகாட்டு விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெய... மேலும் பார்க்க