Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,0...
பூட்டிய வீட்டில் சுவாமி சிலை, தங்கக் காசுகள் திருட்டு
திருச்சியில் பூட்டிய வீட்டிலிருந்த சுவாமி சிலை, தங்கக் காசுகள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி தில்லை நகா், 10-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (61). இவா் பிப்ரவரி 2-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு திருப்பதிக்கு சென்றுவிட்டு, மீண்டும் புதன் கிழமை வீடு திரும்பினாா்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 அடி உயர செம்பு சுவாமி சிலை, 2 குத்து விளக்குகள், ஒரு தங்க முலாம் பூசிய தட்டு, இரு தங்கக் காசுகள் உள்ளிட்டவை திருடு போனது தெரிய வந்தது.
புகாரின்பேரில், தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.