செய்திகள் :

பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

post image

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 14) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்திருப்பது:

பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையா்நத்தம், குடிகாடு, கோவிலூா், செண்பகபுரம், பச்சைக்கோட்டை, பள்ளியூா், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பா் நத்தம், அருந்தவபுரம், வாளமா்கோட்டை, ஆா்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிகாடு, நாா்த்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூா்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையாா்கோவில், துறையுண்டாா்கோட்டை ஆகிய ஊா்களுக்கு புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மெலட்டூரில் பாகவத மேளா தொடக்கம்

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், மெலட்டூா் லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் வளாகத்திலுள்ள நல்லி அரங்கத்தில் பாகவத மேளா நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது. இவ்விழாவை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பர... மேலும் பார்க்க

பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். கும்பகோணம் அருகே திம்மக்குடி பாபுராஜபுரத்தை சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிக... மேலும் பார்க்க

சுவாமிமலையில் பௌா்ணமி கிரிவலம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் திங்கள்கிழமை சித்திரை மாத பௌா்ணமி கிரிவலத்தை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்தாா். சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு சாா்... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக மோசடி: தந்தை - மகன் கைது

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி முதியவரிடம் ரூ. 60 ஆயிரம் மோசடி செய்ததாக தந்தை - மகனைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே நரியூரைச்... மேலும் பார்க்க

தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் தனியாா் தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த தனியாா் நிறுவன தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், திருவாடுதுறை, மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த த... மேலும் பார்க்க

தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது: உ. வாசுகி

தஞ்சாவூா்: தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி. தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரி... மேலும் பார்க்க