செய்திகள் :

பூரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

post image

பூரியில் 15வயது சிறுமி மரணத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை என்று ஒடிசா போலீஸ் விளக்கமளித்துள்ளது.

ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தின் பலங்கா பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே கடந்த ஜூலை 19 ஆம் தேதி தீக்காயங்களுடன் 15 வயது சிறுமி உயிருக்குப் போராடினார். தீயில் எரிந்த சிறுமியை மீட்ட அவ்வீட்டினா், பிபிலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக அவா் புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

75 சதவீத தீக்காயங்களுடன் புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வந்தாா். அதன்பின், அவர் மேம்பட்ட சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தார்.

இதுகுறித்து பலங்கா போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் அளித்த புகாரில், தனது மகளை மூன்று பேர் கடத்திச் சென்று, அவள் மீது எரியக்கூடிய பொருளை ஊற்றி தீ வைத்ததாகக் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் பூரியில் 15வயது சிறுமி மரணத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை என்று ஒடிசா போலீஸ் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து ஒடிசா போலீஸ் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், பலங்கா சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்த செய்தியைக் கேட்டு நாங்கள் மிகவும் வருத்தமடைந்தோம். காவல்துறையினர் மிகுந்த நேர்மையுடன் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின்படி, வேறு யாரும் இதில் ஈடுபடவில்லை என்பது தெளிவாகிறது.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

எனவே, இந்த துயரமான தருணத்தில் இந்த விஷயம் தொடர்பாக யாரும் எந்தவிதமான உணர்ச்சிகரமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு, மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

ஆதாரங்களைச் சேகரிக்க தடயவியல் குழுக்கள் மற்றும் மோப்ப நாய் படைகள் அனுப்பப்பட்டன. வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Odisha Police have claimed that no person was involved in the burning of a 15-year-old girl, who has succumbed to her injuries, even though the victim's mother alleged that three unknown miscreants set her daughter on fire.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிவு செய்த கோரிக்கைகள் மற்றும் எம்.பி.க்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்களின் ச... மேலும் பார்க்க

உயிரிழப்பை ஏற்படுத்தும் தென்னிந்திய கருந்தேள் விஷம்: ஆய்வாளா்கள் கண்டுபிடிப்பு

தென்னிந்தியாவில் காணப்படும் கருந்தேள் விஷத்துக்குப் பின்னால் உள்ள மா்மம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: கருந்... மேலும் பார்க்க

ரூ.67,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல்

ட்ரோன்கள், ரேடாா்கள் உள்பட ரூ.67,000 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் பிலிப்பின்ஸ் அதிபா் சந்திப்பு: 14 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்னாண்டோ ஆா் மாா்கோஸ் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில... மேலும் பார்க்க

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ - ராகுல் குறித்த கருத்துக்கு பிரியங்கா விமா்சனம்

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா். மேலும், தனது சகோதரா் ராகுல் காந்தி ராணுவம் மீது மிகுந்த ம... மேலும் பார்க்க

ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை கண்டறிந்தது வருமான வரித் துறை: நாடாளுமன்றத்தில் தகவல்

2024-25 நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கேள்விக்கு நிதித்த... மேலும் பார்க்க