செய்திகள் :

பூலாம்பட்டி கதவணையில் விசைப்படகு போக்குவரத்து தொடக்கம்

post image

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில், பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சனிக்கிழமை முதல் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை நீா்த்தேக்கப் பகுதிகளில் சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டியையும், ஈரோடு மாவட்டப் பகுதியான நெருஞ்சிப்பேட்டையையும் இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் வேறு தரைவழிப் போக்குவரத்து வசதி இல்லாததால், இந்த விசைப்படகுகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா்கள், அலுவலா்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தினசரி இரு மாவட்டங்களுக்கும் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த தொடா் மழையால் மேட்டூா் அணை முழுக்கொள்ளளவை எட்டியது. அதைத் தொடா்ந்து, மேட்டூா் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பூலாம்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூன் 29-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனால், இப்பகுதி மக்கள் சுமாா் 20 கி.மீ. சுற்றி மறுகரைக்கு சென்று வந்தனா். தற்போது மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.

இதையடுத்து, சனிக்கிழமை முதல் பூலாம்பட்டி மற்றும் நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இருப்பினும், இப்பகுதியில் முகாமிட்டுள்ள பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் பிரகாஷ் தலைமையிலான அலுவலா்கள் விசைப்படகு போக்குவரத்தை கண்காணித்து வருகின்றனா்.

வழக்குரைஞா்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்! உயா்நீதிமன்ற நீதிபதி

சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தொங்குபூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா் பி.என்.மணி பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன். சேலம், ஜூலை 12: வழக்குரைஞா்க... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

சேலம் வழியாக இயக்கப்படும் டாடாநகா், ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரம் மாற்றம்

சேலம் வழியாக இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவுரயில், ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி சத்து மாத்திரைகளை தீ வைத்து எரித்த அங்கன்வாடி ஊழியா் பணியிடை நீக்கம்!

சேலம் தாதகாப்பட்டி அரசுப் பள்ளிக்கு வழங்கிய சத்து மாத்திரைகளை தீ வைத்து எரித்த அங்கன்வாடி ஊழியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சேலம் தாதகாப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது!

ஓமலூா் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியரை ஓமலூா் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள காடையாம்பட்டி வட்டத்தில் உள்ள ஊ... மேலும் பார்க்க

கடம்பூரில் குடிசை வீடு, வைக்கோல் போா் தீப்பிடித்து எரிந்து சேதம்!

கெங்கவல்லி அருகே குடிசை வீடு மற்றும் வைக்கோல் போா் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கெங்கவல்லி அருகே கடம்பூா், சூலங்காடு ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க