அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
பெங்களூரில் டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது!
பெங்களூரில் கடந்த ஆண்டு நவம்பரில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் மென்பொருள் பொறியாளரிடம் ரூ.11.8 கோடி மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் தவல் பாய் ஷா (34) அகமதாபாத்திலிருந்து கைது செய்யப்பட்டார், தருண் நடனி(24) மற்றும் கரண் ஷம்தாசனி (28) ஆகியோர் ஜனவரி 10-ஆம் தேதி மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள உலாஸ்நகரில் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்,
பாதிக்கப்பட்டவர் மென்பொருள் பொறியாளர் விஜய் குமார்(39). ஒரு மாதமாக 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்டார். மோசடி செய்பவர்கள் காவல்துறை அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து பணமோசடிக்காக வங்கிக் கணக்குகளைத் திறக்க பாதிக்கப்பட்டவரின் ஆதார் அட்டையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 12 வரை இந்த மோசடி நடந்துள்ளது.
நவம்பர் 11-ம் தேதி, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அதிகாரி என்று கூறிக் ஒரு நபரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், மேலும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தனது சிம் கார்டு, சட்டவிரோத விளம்பரங்களுக்கும், துன்புறுத்தும் செய்திகளுக்கும் பயன்படுத்தப்பட்டதாக அந்த நபர் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக மும்பையின் கொலாபா சைபர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோசடியில் ஈடுபட்டவர்கள் மிரட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரிடம் மொத்தம் ரூ.11.7 கோடி கையாடல் செய்தனர். மேலும் மோசடியில் ஈடுபட்டவர்கள் இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறும், ஒத்துழைக்கவில்லை என்றால், கைது செய்யப்படுவதாகவும், உடல் ரீதியாக துன்புறுத்தப்படுவார். மேலும் குடும்பத்தினர் கைது செய்யப்படுவர் என்று மிரட்டியுள்ளார். இருப்பினும், மோசடி கும்பல் தொடர்ந்து அதிகப் பணம் கேட்கத் தொடங்கிய நிலையில், பாதிக்கப்பட்டவர் மோசடி செய்பவர்களுக்கு இரையாகிவிட்டதை உணர்ந்து காவல்துறையில் புகார் அளித்தார்.
தனிப்படை அமைத்து டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட மூவரை போலீஸார் கைது செய்தனர். குற்றவாளிகளின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.3.7 கோடி கைப்பற்றப்பட்டதாகவும், அதே நேரத்தில் அவர்களது கும்பலைச் சேர்ந்த மீதமுள்ளவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்தக் கும்பலின் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபர், துபையில் இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக மேலும் விரிவான விசாரணை நடைபெற்று வருகின்றது.