பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுகிறது திமுக: இபிஎஸ்
பெங்களூரில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!
பெங்களூரில் மஞ்சள் தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை இன்று(ஆக. 10) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.
பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ஊதா மற்றும் பச்சை தடங்களில் வழங்கப்படுகின்றன. இதனிடையே, மூன்றாவதாக மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
ஆர்.வி சாலை ரயில்நிலையம் முதல் பொம்மசந்திரா ரயில்நிலையம் வரையிலான இந்த மஞ்சள் தடத்தில், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதற்கான ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள், மேற்கு வங்கத்தின் உத்தரபுராவில் உள்ள டாட்டாகர்க் தொழிலகத்தில் இருந்து ஜனவரி மாதம் பெங்களூரு வந்து சோ்ந்தது. முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
எலக்ட்ரானிக் சிட்டி பகுதியுடன் மெட்ரோ ரயில்களை இணைக்கும் நிலையில், பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
முதல்கட்டமாக 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படவிருக்கிறது. இதில் 3 ரயில் பெட்டிகள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு, பெங்களூரில் மக்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவையை பிரதமர் மோடி, இன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.
இதையும் படிக்க: ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!