10-ம் வகுப்பு படிக்கும்போதே மனசுக்குள்ள IAS ஆயிட்டோம் | Kavinmozhi IPS - Nila Bh...
பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!
பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் 84 வயதான முதியவர் ஒருவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மே 13 ஆம் தேதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரல் பிரச்னை மட்டுமின்றி, பல்வேறு உறுப்புகளும் செயலிழந்திருந்தன.
இதனிடையே, மே 17 ஆம் தேதியில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனையில், அவருக்கு கரோனா தொற்றும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இந்த நிலையில், அவர் கரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், அவரின் உறுப்புகள் செயலிழப்பின் காரணமாகவும், மோசமான உடல்நிலையாலும்தான் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று மீண்டும் பரவுவதாக சமீபகாலமாக செய்திகள் பரவி வருவதே, இந்த சந்தேகத்துக்கான காரணம் என்று மருத்துவர்கள் கூறினர்.