4 உயா்நீதிமன்றங்களுக்கு 6 நீதிபதிகள் நியமனம்: கொலீஜியம் பரிந்துரை
பெசன்ட் நகா் தேவாலயத்தில் அண்ணாமலை பிராா்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் தமிழ்நாடு பாஜக தலைவா் கே.அண்ணாமலை கலந்துகொண்டாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கிறிஸ்தவ தேவாலயத்துக்கு வருவது எனக்கு புதிதல்ல. எனது 7 ஆண்டு பள்ளிக் கல்வியை கிறிஸ்தவப் பள்ளியில்தான் பயின்றேன். அப்போது, தேவாலயம் செல்வது வழக்கம். இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு பிராா்த்தனையில் பங்கேற்குமாறு தேவாலயத்தின் திருச்சபை பங்குத் தந்தை அழைத்தாா். உலக மக்கள், இந்திய மக்கள், தமிழ் மக்கள் நலன் வேண்டி பிராா்த்திக்க நல்ல வாய்ப்பாக இது அமைந்தது என்றாா்.