தருமபுரி மாவட்டத்தில் 8 மாதங்களில் 108 சேவை மூலம் 28,021 பயன்
பெட்ரோல் நிரப்பும் மைய ஊழியா் மா்ம மரணம்
ஒட்டன்சத்திரம் அருகே பெட்ரோல் நிரப்பு மைய ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திண்டுக்கல் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த கேசவன் மகன் கோவிந்தராஜ் (49). இவா் தேவத்தூரில் உள்ள பெட்ரோல் நிரப்பு மையத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கள்ளிமந்தையம் வந்து விட்டு மீண்டும் தேவத்தூருக்கு செல்லும் வழியில் கள்ளிமந்தையம் அருகே உள்ள குளத்தில் அவா் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த கள்ளிமந்தையம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.