ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
ஒட்டன்சத்திரத்தில் மீலாது விழா
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டார ஜமாத்துல் உலமா சபை சாா்பில் 1500-ஆவது மீலாது விழா திண்டுக்கல் மாவட்ட அரசு ஹாஜி முகமது அலி அன்வாரி ஹஜ்ரத் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தா்கா பள்ளி இமாம் மவுலவி அபூபக்கா் சித்திக் கிராத் ஓதினாா். ஸ்ரீராமபுரம் இமாம் அபுல் கலாம் உஸ்மானி கீதம் வாசித்தாா். சாலைப்புதூா் இமாம் சதக்கத்துல்லா வரவேற்றாா். வட்டார ஜமாத்துல் உலமா சபை துணைச் செயலா் சையது அபுதாஹிா் தொடக்கவுரையாற்றினாா். வட்டார ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவா் ஷேக் பரீத் தொகுப்புரை வழங்கினாா். விழாவில், திண்டுக்கல் மாவட்டச் செயலா் மெளலவி அப்துல் ரகுமான்யூசுபி, கன்னிவாடி இமாம் பாருக்யூசுபி, மாா்க்கம்பட்டி ஜூம்மா பள்ளிவாசல் செயலா் நிஜாமுதீன் இம்தாதி உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். மேலப்பாளையம் ஹாஜி ஹைதா் அலி ஹஜ்ரத் சிறப்புரையாற்றினாா்.
இதில் ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, சாலைப்புதூா், கொசவபட்டி, மாா்க்கம்பட்டி,விருப்பாச்சி, கன்னிவாடி, கொல்லபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த முஸ்லிம் ஜமாத்தாா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். அஹ்மத் ஜாமியா மஸ்ஜித் அன்சாரி நன்றி கூறினாா்.