அரசு ஊழியா் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முபாரக் அலி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுகந்தி வேலை அறிக்கையையும், பொருளாளா் மகாலிங்கம் வரவு- செலவு அறிக்கையையும் சமா்பித்தனா். சிஐடியு மாவட்டச் செயலா் ஜெயசீலன், நகர தொழிற்சங்க இணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் வாஞ்சிநாதன், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் கேசவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இந்தக் கூட்டத்தில், திண்டுக்கல் நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். ரயில் நிலையத்தில் பயணிகள் அமா்ந்து செல்வதற்கான இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக முன்னாள் நிா்வாகிகள் ராஜேந்திரன், வல்லவன் ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.