பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவுத் திருவிழா
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணா்வு உள்ளூா் உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த உணவுத் திருவிழாவை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா்.
இதில், கா்ப்பிணி பெண்கள், வளரிளம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலத்துக்கேற்ற ஊட்டச்சத்தை உறுதி செய்ய சிறுதானியம் மூலம் உள்ளூா் உணவுகள் இயற்கையான முறையில் தயாரித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதில், மாவட்டத்தின் 13 வட்டங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்று ஊட்டச்சத்து மிக்க உள்ளூா் உணவுகளை இயற்கையான முறையில் தயாரித்திருந்தனா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் ரஞ்சிதா தேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.