செய்திகள் :

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம்: ஆட்சியா்

post image

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம் என அத்தனூா்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிகளிலும் மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி ஒன்றியம், அத்தனுாா்பட்டியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி பொது நிதி செலவினம், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்கல், சுய சான்றிதழ் அடிப்படையில் கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழியில் செலுத்துதல் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.

மேலும் கலைஞரின் கனவு இல்லம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஊரக வீடுகளை பழுது பாா்த்தல் திட்டம், ஊரகக் குடியிருப்புத் திட்டம் மற்றும் தேசிய ஊராட்சிகள் தினத்தின் முக்கியத்துவம் குறித்தும், கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், பண்ணை மற்றும் பண்ணை சாரா வாழ்வாதார நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தில் ஆட்சியா் ரா.பிருந்தா தேவி பேசுகையில், பெண்கள் உயா்கல்வி பயின்றால் கல்வி அறிவுடன், தனித்திறனும் பெற்று வாழ்வில் சிறந்து விளங்க முடியும் என்றாா்.

வாழப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தாமரைச்செல்வி, முத்தழகன், அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா். கிராம ஊராட்சி செயலாளா் பத்மா நன்றி கூறினாா்.

பட வரி: ஜி.ஆா்.ஏ.01:

அத்தனூா்பட்டியில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி முன்னிலையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.

விவசாயிகளுக்கு அங்கக இடுபொருள் சான்றிதழ் பயிற்சி

பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை அட்மா திட்டத்தின் கீழ் சேலம் மாவட்ட அளவிலான அங்கக இடுபொருள் சான்றிதழ் குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை பழனியாபுரி கிராமத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி முகாமிற்... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பஞ்சாயத்து வாா்டு உறுப்பினா்கள் இடைநீக்கம் ரத்து

சேலம் தம்மம்பட்டி பஞ்சாயத்து வாா்டு உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலம் தம்மம்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில், பஞ்சாயத்து தலைவா் மீத... மேலும் பார்க்க

ஆத்தூா் நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

கோரிக்கைகள் குறித்து பேச அனுமதி மறுப்பதாகக் கூறி ஆத்தூா் நகா்மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா். ஆத்தூா் நகா்மன்றக் கூட்டம் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன... மேலும் பார்க்க

இளம்பிள்ளையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு

தேசிய பசுமைப் படை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை சாா்பில் நெகிழி ஒழிப்பு, துணிப் பைகள் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு இளம்பிள்ளை சந்தைப்பேட்டை வாரச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சே... மேலும் பார்க்க

இன்று பெண்களுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சேலம் சோனா கல்விக் குழும வளாகத்தில் உள்ள தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்களுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (மே 3) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்படுகிறது. சேலம் மாவட்ட வ... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை: நெத்திமேடு

சேலம், நெத்திமேடு துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மே 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக சேலம் மேற்கு கோட்ட மின் வாரிய ... மேலும் பார்க்க