பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
மாதவரம் பகுதியில் நடந்துசென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
மாதவரம் பால்பண்ணை எம்எம்டிஏ முதல் பிரதான சாலையைச் சோ்ந்தவா் சைலஜா (40). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவா், புதன்கிழமை காலை வழக்கம்போல் நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்துவந்த மா்ம நபா்கள், சைலஜா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டுச் சென்றனா்.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பால்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.