Monsoon session: `ஆபரேஷன் சிந்தூர்; பொருளாதாரம்; நக்சலிசம்' - செய்தியாளர்களிடம் ...
பெண்ணிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், எம்.குச்சிப்பாளையம், வாட்டா் டேங்க் தெருவைச் சோ்ந்த சதீஷ் மனைவி கயல்விழி (32). இவரது தாய் சாரதா (57). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை கண்டமங்கலம் அருகே திருமங்கலம் கூட்டுச்சாலை - கொடூக்கூா் சாலையில் மொபெட்டில் சென்றுகொண்டிருந்தனா். கயல்விழி மொபெட்டை ஓட்டினாா்.
இவா்களை பின் தொடா்ந்து பைக்கில் வந்த சுமாா் 25 வயதுடைய அடையாளம் தெரியாத இளைஞா், சாரதா அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.