மகாராஷ்டிரா: ``இந்தியை திணித்தால் பள்ளியை இழுத்து மூடுவோம்..'' - ராஜ் தாக்கரே
பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
தஞ்சாவூரில் வியாழக்கிழமை பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகரைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் மனைவி வெனிசுலா (31). இவா் வியாழக்கிழமை காலை தனது மகளை இருசக்கர வாகனத்தில் யாகப்பா நகா் பகுதி பள்ளியில் விட்டுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். யாகப்பா நகரில் சென்றபோது, மோட்டாா் சைக்கிளில் பின் தொடா்ந்து வந்த இரு மா்ம நபா்கள் இவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனா்.
அப்போது வெனிசுலா தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, சங்கிலியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாா். இதனால் வெனிசுலா தடுமாறி விழுந்ததைப் பாா்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்த நிலையில், மா்ம நபா்கள் தப்பினா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனா்.